KALVI TV|Kalvi Tholaikaatchi FAQ|கல்வித் தொலைக்காட்சி FAQ
1.கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நேரத்தில் பார்க்க தவறினால், வேறு எப்படிபார்க்க
முடியும்?
கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி வெப்சைட், Tn
e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் Official YouTube சேனல் வாயிலாக நிகழ்ச்சிகளைப் பார்த்து
பயன்பெறலாம்.
2.ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை, மாணவர்கள் திருப்புதல் முறையில் (Revision) படிக்கும்போது சந்தேகங்கள்
ஏற்பட்டால், இந்த வெப்சைட் மூலம் எப்போது வேண்டுமானாலும் விடை காண முடியுமா?
ஆம். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, உங்கள் வினாக்களை கல்வித் தொலைக்காட்சி
இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் கேள்விகளை பதிவு
செய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்து, வாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக
கல்வித்தொலைக்காட்சியில் வினா – விடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் மாணவ
மாணவியர்கள் பயனடையலாம்.
3.அனைத்து வகுப்பு, அனைத்து பாடங்களுக்கான வீடியோக்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்குமா?
ஆம், கிடைக்கும்; கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாக, தலைப்புவாரியாக, அலகு வாரியாக
நடத்தப்படுமோ, அதே வகையில் பாடங்கள், வீடியோவாக முழுமையாக ஒளிபரப்பப்படும்.
4. கல்வித் தொலைக்காட்சியில் நாள்தோறும் எந்தெந்த நேரத்தில், எந்தெந்த பாடங்கள் குறித்து இணைவழி
வகுப்பு நடத்தப்படும் என்ற Kalvi TV நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே வெளிடப்படுமா?
ஆம். Kalvi Tholaikaatchi Standardised Time Table – முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு பட்டியல் – பள்ளியில்
பின்பற்றப்படும் கால அட்டவணைப் போன்று வெளியிடப்படும்.